காலிபிளவர் 65 சாதம் | Cauliflower 65 Rice

காலிபிளவர் 65 செய்ய தேவையான பொருள்கள்:

காலிபிளவர் - 1 நடுத்தரளவு
சோளமாவு+ அரிசி மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு புட் கலர் - 1 சிட்டிகை
வரமிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம் :

*காலிபிளவரை  சிறுபூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 1/2 வேக்காடு வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் மேற்கூறிய பொருட்களில் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சாதம் செய்ய:

பாஸ்மதி - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி -  1 கைப்பிடி
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம் :


*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒனறாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் ஊறவைத்த அரிசி, உப்பு, 3 கப் நீர் சேர்த்து  3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் புதினா கொத்தமல்லி, காலிபிள்வர் 65 சேர்த்து சாதத்தை உடையாமல் கிளறவும்.

*ராய்த்தாவுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

Related Videos