கோவை ஹோட்டல் அங்கனன் ஸ்டைல் சிக்கன் பிரியாணி | Kovai Hotel Angannan Style Chicken Biryani

கோயம்புத்தூரில் வெஜ் ஹோட்டலுக்கு அன்னபூரணா எப்படி பிரபலமோ,நான் -வெஜ் ஹோட்டலுக்கு அங்கனன் மிக பிரபலம்.இங்கு அசைவ பிரியாணி மிக சுவையாக இருக்கும்.

இந்த பிரியாணியின் ஸ்பெஷல் தக்காளி சேர்க்க தேவையில்லை.பூண்டை முழுதாகவும்,இஞ்சியை அரைத்தும் சேர்க்கவேண்டும்.காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும் சேர்க்கவேண்டும்.கொத்தமல்லி மற்றும் அதனுடன் சில மசாலா சேர்த்து அரைத்தால் அழகான கலர் இந்த பிரியாணிக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் -1/2 கிலோ
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் -2 பெரியது
கீறிய பச்சை மிளகாய் -3
முந்திரி -10
பூண்டுப்பல் -15
புதினா -1 கைப்பிடி
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் -5 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பச்சை மிளகாய் - 4
பட்டை -1சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -3
கசகசா -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1/4 கப்

செய்முறை விளக்கம்:

* அரைக்க கொடுத்துள்ளவைகலை மைய அரைக்கவும்.அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு முந்திரி, பூண்டுப்பல், வெங்காயம் மற்றும் புதினா என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் தயிர் மற்றும் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.

*சிக்கன் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*இதனுடன் ஊறவைத்த அரிசியை நன்கு வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறி 4 1/2 நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*அரிசி முக்கால் பாகம் வெந்து வரும் போது  கீறிய பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும் அல்லது 20 நிமிடம் தம் போடவும்.

*சாதம் வெந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி ராய்த்தாவுடன் பரிமாறவும்.

பின் குறிப்பு:

*காரம் அதிகம் வேண்டுமெனில் பச்சை மிளகாயை கூடுதலாக சேர்க்கவும்.

Related Videos