சிம்பிள் காஷ்மீர் புலாவ் | Simple Kashmir Pulao
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி- 2 கப்
மஞ்சள்தூள்- 1/8 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
நீர் - 2 3/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
குங்குமப்பூ - சிறிது
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை- 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை 2
கிராம்பு 3
ஏலக்காய் 3
பட்டை சிறுதுண்டு
செய்முறை விளக்கம் :
*வெங்காயத்தை பொன்னிறமாக எண்ணெயில் பொரிக்கவும்.வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து ஊறவைத்த அரிசியை சேர்த்து வதக்கி உப்பு, நீர், மஞ்சள்தூள் மற்றும் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
*பரிமாறும் போது வறுத்த முந்திரி திராட்சை மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.