பஞ்சாபி வெஜ் தாளி

இந்த பிரியாணியின் ஸ்பெஷல் தாளிக்கும் போது மிளகு சீரகம் சேர்க்கவேண்டும்.மற்றும் தக்காளியினை வதக்கி சேர்க்காமல் கடைசியாக சேர்க்க வேண்டும்.புதினா  சேர்க்ககூடாது.

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி -2 கப்
கேரட்+பீன்ஸ்+பச்சை பட்டாணி - 1 1/2 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க:

பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு -4
மிளகு -5
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம் :

*அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் பீன்ஸ் நறுக்கவும்.

*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காய்கள் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

*பின் தயிர் மற்றும் வெண்ணெய் சேர்த்து வதக்கவும்.

*இவைகள் வதங்கியதும் தூள் வகைகள், அரிசி சேர்த்து வதக்கி உப்பு மற்றும் 2 1/2 கப் நீர் சேர்க்கவும்.

*பின் நறுக்கிய தக்காளி மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும். பரிமாறும் போது கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

பஞ்சாபி காலசன்னா மசாலா:
தேவையான பொருள்கள்:

கறுப்புக்கடலை -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி விழுது -1
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியாத்தூள்+மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன்
கரம்மசாலா -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
சீரகம் -3/4 டீஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -2
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

செய்முறை விளக்கம் :

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தேவைக்கு நீர் சேர்த்து, உப்பு, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.


*வெந்ததும் முழு கரம் மசாலாக்களை எடுத்து விடவும்.1/4 கப் வேகவைத்த கடலையை மட்டும்  அரைக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் தூள் வகைகள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


*பின் வேகவைத்த கடலை மற்றும் வேகவைத்த நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் அரைத்த கடலை விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

அம்ரிஷ்சரி ஆலு குல்சா :
தேவையான பொருள்கள்:

மைதா - 1 கப்
பால் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் - சுடுவதற்கு

அம்ரிஷ்சரி ஆலு ஸ்டப்பிங் செய்ய:

வேகவைத்த மசித்த உருளை - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 3/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -1  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம் :

*மைதா, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து 3 முறை சலிக்கவும்.

*அதனுடன் பால், தயிர் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசையவும்.தேவையென்றால் மட்டும் மேலும் பால் தெளித்து மாவை கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை மட்டும் ஒன்றாக கலந்து மசித்து வைக்கவும்.

*1 மணிநேரத்திற்கு பின் மாவினை நன்கு பிசைந்து 4 பெரிய உருண்டைகளை எடுக்கவும்.

*உருட்டும் கட்டையில் எண்ணெய் தடவி உருண்டையை லேசாக தேய்த்து அதன் மேல் உருளை ஸ்டப்பிங் வைத்து மூடவும்.

*மீண்டும் எண்ணெய் தடவி ஸ்டப்பிங் வெளியே வராதபடி மெலிதாக உருட்டவும்.

*நான்ஸ்டிக் கடாயில் இருபக்கமும் வேகவைத்து வெண்ணெய் தடவி பரிமாறவும்.

மசாலா லஸ்ஸி:
தேவையான பொருள்கள்:

தயிர் - 1 கப்
புதினா + கொத்தமல்லித்தழை - 1/4 கப்
இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு


செய்முறை விளக்கம் :


* முதலில் புதினா + கொத்தமல்லித்தழை சேர்த்து அரைத்த பிறகு தயிர்+உப்பு +இஞ்சிசாறு சேர்த்து நன்கு ப்ளெண்டரில் அரைத்து பரிமாறவும்.

பின்குறிப்பு :

*விரும்பினால் வறுத்துப் பொடித்த சீரகப்பொடியை தூவி பரிமாறலாம்.

வெள்ளரிக்காய் ராய்த்தா :
தேவையான பொருள்கள்:

பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் -1/2 கப்
விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி -1/4 கப்
தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை சிறிது - சிறிது
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம் :

*பரிமாறும் போது அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Related Videos