செட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல் | Chettinad Pepperchicken Fry

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நீரில்லாமல் வடிகட்டவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

*இந்த மசாலா நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

*சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து மூடி வேகவிடவும்.சிக்கன் விடும் நீரே போதும்.

*சிக்கன் பாதி வெந்ததும் மிளகுத்தூளை தூவி நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

Related Videos