கூட்டாஞ்சோறு | Kootanchoru

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி -1/2 கப்
துவரம்பருப்பு -1/8 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் - 1 கப்
முருங்கைக்கீரை - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சையளவு
உப்பு -தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
சின்ன வெங்காயம் -5

தாளிக்க

எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வடகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய், கேரட், கத்திரிக்காய், மாங்காய், அவரைக்காய் மற்றும் காராமணிக்காய்

செய்முறை விளக்கம்:

*அரிசி மற்றும் பருப்பை கழுவி 2 கப் நீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.குக்கரில் ஊறிய அரிசி பருப்பை ஊறவைத்து நீருடன் அடுப்பில் வைத்து மூடி மட்டும் போட்டு சிறு தீயில் வேகவிடவும்.பாதி அளவு வெந்து நீர் வற்றியிருக்கும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  நைசாக அரைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்களை சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள்தூள் , உப்பு மற்றும் கீரை சேர்த்து பிரட்டி அரைத்த மசால் சேர்த்து கொதிக்க விடவும்.

*காய்கள் பாதி வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.

*வெந்த அரிசி பருப்பில் வேகவைத்த காய்கலவை சேர்த்து மாங்காய்துண்டுகள், தேவைக்கு உப்பு மற்றும் மேலும் 1 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

*வெயிட் போட்டு  சிறுதீயில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

*பின் மீதமுள்ள‌ எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சேர்க்கவும்.

Related Videos