கொண்டைக்கடலை(சன்னா) பிரியாணி | Chana Biryani

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி -3 கப்
கொண்டைகடலை- 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம்- 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் -2
புதினா+கொத்தமல்லி தலா- 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

ஊறவைக்க‌:

தயிர்- 1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி -1 டீஸ்பூன்

தாளிக்க‌:

பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
ஏலக்காய்- 3
பிரியாணி இலை - 2

செய்முறை விளக்கம்:

*கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரினை அளந்து தனியாக வைக்கவும்.
*ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.

*அரிசியை கழுவி சரியாக 1 மணிநேரம் ஊறவைத்து நீரினை வடிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் வேகவைத்த சன்னா மற்றும் ஊறவைத்த தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
*இப்போழுது இந்த கலவை முழுவதும் டிரையாக இருக்க வேண்டும்.அதனை அப்படியே சமமாக பரப்பி விடவும்.
*அதன் மீது ஊறவைத்த அரிசியை சமபடுத்தி விடவும்.

*அதன் மீது சன்னா வேகவைத்த நீரோடு சேர்த்து 6 கப் நீர் ஊற்றவும்.

*புதினா கொத்தமல்லியை தூவி விடவும்.

*நீர் முழுவதும் வற்றிய பிறகு மிக குறைந்த தீயில் தம்மில் 10 நிமிடங்கள் போடவும்.
*தம் போட்ட பின் மெதுவாக கிளறி விட்டு,பரிமாறும் போது 1 முறை கிளறி பரிமாறவும்.
*சாதமும் உடையாமல் உதிரியாக இருக்கும்.

Related Videos