சிக்கன் பஜ்ஜி | Chicken Bajji
தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் - 1/2 கிலோ
மைதா - 2 கப்
முட்டை - 2
அரிசி மாவு - 1/2 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*சிக்கனில் சிறிது உப்பு, பெருஞ்சீரகத்தூள், மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
*1 கப் நீர் சேர்த்து கடாயில் வேகவைக்கவும்.வெந்ததும் கறியை தனியாக எடுத்து வைக்கவும்.
*நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை இவைகளை இடிப்பானில் போட்டு நன்கு நசுக்கவும்.
*ஒரு பவுலில் மைதா, அரிசிமாவு, முட்டை, நசுக்கிய வெங்காய கலவை, சிறிது உப்பு மற்றும் கறி வேகவைத்த நீர் சேர்த்து கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.
*வேகவைத்த கறிதுண்டுகளை ஒவ்வொன்றாக மைதா கலவையில் நனைத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.