அலிகார் பிரியாணி | Aligarh Biryani

இந்த பிரியாணியில் வெங்காயம்+தக்காளி+காரம்+நெய் +புதினா+கொத்தமல்லி  எதுவும் சேர்க்க தேவையில்லை.இதன் ஸ்பெஷலே வெள்ளை கலரில் தான் இருக்கும்.

காரம் இல்லாததால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இதை நான் சிக்கன் குருமாவுடன் பரிமாறினேன்.

தேவையான பொருட்கள்:

முழு கோழி - 1

சிக்கன் ஸ்டாக் செய்ய‌
பூண்டுப்பல் - 5
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

சோம்பு +தனியா தலா -  1 டேபிள்ஸ்பூன்

கறுப்பு ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 8
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நீர் - 2 கப்

செய்முறை விளக்கம்:

*குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து தாளிக்கவும்.

*நறுக்கிய வெங்காயம் மற்றும்  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் சிக்கன் தோல் மற்றும் சிக்கன் துண்டுகள் சிறிது சேர்த்து வதக்கவும்.

*பின் 2 கப் நீர், உப்பு, தனியா, சோம்பு மற்றும்  மிளகு சேர்த்து 4 5 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

பிரியாணி செய்ய‌

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
தயிர் - 3/4 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க:

இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 10
பட்டை - 1சிறுதுண்டு
ஜாதிக்காய் - 1 துண்டு(சிறிதளவு)

தாளிக்க:

மிளகு - 1/2 டீஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 2

செய்முறை விளக்கம்:

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் கறிதுண்டுகளை சேர்த்து வதக்கி பின் தயிர் சேர்த்து வதக்கவும்.

*உப்பு, சிக்கன் ஸ்டாக் , பாஸ்மதி மற்றும் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

*இந்த அளவு அரிசிக்கு 3 கப் நீர் (சிக்கன் ஸ்டாக் 3 கப் குறைவாக இருந்தால் மேலும் நீர் சேர்த்து கொள்ளவும்)தேவைப்படும்.

*சிக்கன் ஸ்டாக்கில் உப்பு இருப்பதால் தேவைக்கு பிரியாணி செய்யும் போது உப்பு சேர்க்கவும்.

*இதே போல் ஸ்டாக் மட்டனிலும் செய்யலாம்,கூடுதல் நேரம் வேகவைத்து எடுக்கவும்.

*இதில்  முழுஜாதிக்காயில் கால்வாசி சேர்த்தால் போதும்,அதிகம் சேர்த்தால் சுவை மாறிவிடும்.

Related Videos