மீன் கட்லட் | Fish Cutlet

தேவையான பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
வேகவைத்த உருளைக் கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு +எண்ணெய் = தேவையான அளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - பிரட்டுவதற்க்கு
சோம்புத்தூள் - 11/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

செய்முறை விளக்கம்:

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்து வைக்கவும்,உருளைக்கிழங்கை மசித்து வைக்கவும்.

*வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்புத்தூள், வெங்காயம், மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் மீன் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து
கலவை ஓன்றாகும் வரை நன்கு பிரட்டவும்.

*உப்பு பார்த்து போடவும், மீனில் ஏற்கனவே உப்பு இருக்கும்.கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு ஆறவிடவும்.

*முட்டையை நன்கு அடித்து வைக்கவும்.ஒரு தட்டில் ரஸ்க்தூள் வைக்கவும்.

*மீன் கலவையை நமக்கு விருப்பமான வடிவில் செய்து முட்டையில் நனைத்து ரஸ்க்தூளில் நன்கு பிரட்டி வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கட்லட்டை இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.

*கெட்சப்,மிளகாய் சாஸுடன் சூடாக பரிமாறலாம்.

பின் குறிப்பு:

*நான் உருண்டையாக உருட்டியதில் 12 கட்லட் வந்தது.தூனா மீனை பிரெஞ்சில் Thon poisson என்று சொல்வாங்க.

Related Videos