மீன் அசாது | fish asaatu

தேவையான பொருட்கள்:

மீன் துண்டுகள் - 12
வெங்காயம் - 1 1/2
தக்காளி - 1 பெரியது
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்ப்பால் - 400 மி.லி டின்
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
பூண்டுப்பல் - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
எலுமிச்சைசாறு - 1டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 3

செய்முறை விளக்கம்:

*மீனை சுத்தம் செய்து அதில் 1 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊறவிடவும்.

*வெங்காயம் மற்றும் தக்காளி நறுக்கவும்.

*நறுக்கிய வெங்காயத்திலிருந்து சிறிது வெங்காயம், பூண்டு, சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பில்லை நசுக்கிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மீனை பொரிக்கவும்,ரொம்ப முறுகலாக பொரிக்ககூடாது.

*அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம், நசுக்கிய வெங்காய,சீரகம் மற்றும் தக்காளி இவைகளைப் போட்டு நன்கு வதக்கவும்.

*பின் எல்லா தூள் வைகளையும் சேர்த்து நன்கு வதங்கியப்பின் உப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்ததும் பொரித்த மீன்களைப் போட்டு 10 நிமிடம் கொதித்த பின் எலுமிச்சைசாறு சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.

Related Videos