ஈஸி சிக்கன் குழம்பு | Easy Chicken Kuzhambu
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயாம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றும் பாதியுமாக தனித்தனியாக அரைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, தூள் வகைகள் மற்றும் உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.