அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி | Anjappar Style Chicken Biryani

இது எப்பவும் நாம் பிரியாணிக்கு பயன்படுத்தும் பொருட்கள் போல் உபயோகபடுத்தவேண்டும் செய்முறை மட்டும் சிறிது மாறுபடும்.

இதில் தயிர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்க்கதேவையில்லை.நெய் மட்டும் சிறிது அதிகமாக ஊற்றி செய்தால் அதே சுவையுடன் இருக்கும்.

எந்த பிரியாணி செய்தாலும் அரிசியை சிறிது நெய்யில் வருத்து சமைத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.

புதினா கொத்தமல்லியை வதக்கி சேர்க்காமல் அரிசி சேர்க்கும் போது சேர்க்கவேண்டும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 3/4 கிலோ
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் -  2 பெரியது
தக்காளி -  3 பெரியது
நெய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
வரமிளகாய்த்தூள்  - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா + கொத்தமல்லி -  தலா 1/2 கப்
உப்பு ‍-  தேவைக்கு
எண்ணெய் -  4 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
பிரியானி இலை -  4
ஏலக்காய் -  5
கிராம்பு -  4
ஜாதிக்காய் - சிறுதுண்டு
பட்டை - 1 துண்டு

செய்முறை விளக்கம்:

*வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை துண்டுகளாகவும் ,பச்சை மிளகாயை நீளவாக்கிலும் நறுக்கவும்.

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரைவடிக்கவும்.

*குக்கரில் சிறிது நெய் ஊற்றி அரிசியை லேசாக வறுத்தெடுக்கவும்.

*பின் சிறிது  நெய்  மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

*தக்காளி நன்கு வெந்ததும் சுத்தம் செய்த சிக்கன் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


*சிக்கன் வெந்து வெள்ளை கலரில் நிறம் போது மிளகாய்த்தூள் சேர்த்து அதிகதீயில் வதக்கவும்.அதேநேரம் சிக்கன் முழுதாக வெந்துவிடவும் கூடாது.

*பின் 4 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவைத்து அதனுடன் வறுத்த பாஸ்மதி+புதினா+பாதி கொத்தமல்லித்தழை +தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

*மூடி போட்டு வேகவிடவும் நீர் நன்கு சுண்டி வரும் போது மீதமுள்ள நெய் சேர்த்து தம்மில் 10 நிமிடம் போடவும்.

*சாதம் வெந்ததும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி மீதமிள்ள கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும்.

பின் குறிப்பு:

*இதே முறையில் மட்டனில் செய்யும் போது முதலில் மட்டனை வேகவைத்த பின் மேற்கூறிய செய்முறையில் செய்யவேண்டும்.

Related Videos