கானாங்கெழுத்தி மீன் புட்டு | Mackerel Fish Puttu
தேவையான பொருட்கள்:
கானாங்கெழுத்தி மீன் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*மீனை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்குமளவு நீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நீர்வற்றும் வரை கிளறி வேகவிடவும்.
*ஆறியதும் முள்ளில்லாமல் உதிர்க்கவும்.
*கடாயில் எணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மிளகுத்தூள், சோம்புத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் உதிர்த்த மீனை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறி தேங்காய்த்துறுவல் மற்றும்
கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கட்லட் செய்யலாம்.