ஹைதராபாத் சிக்கன் பிரியாணி | Hyderabad Chicken Biryani

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் -2
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள்+தனியாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் +நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 4
பச்சை ஏலக்காய் - 2
பட்டை - 1 பெரியதுண்டு
கிராம்பு - 6
பிரியாணி இலை - 2
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ(அ)மஞ்சள் கலர் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் அரிந்து பொன்னிறமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பவுலில் சிக்கன், எலுமிச்சை சாறு , உப்பு, பாதி புதினா கொத்தமல்லிதழை, சிறிதளவு பொரித்த வெங்காயம், பச்சை மிளகாய், தயிர், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், 
பிரியாணி இலை -1, கறுப்பு ஏலக்காய் - 2, பச்சை ஏலக்காய் -1, கிராம்பு - 3 மற்றும் பட்டை -பாதி துண்டு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் நிறைய வைத்து கொதிக்க விடவும்.அதில் பாதி உப்பு, மீதமுள்ள ஏலக்காய் மற்றும் பட்டை கிராம்பு சேர்த்து அரிசியை பாதி வேக்காடாக வடிக்கவும்.

*வேறொரு பெரிய பாத்திரத்தில் ஊறவைத்த சிக்கன், சிறிது புதினா கொத்தமல்லி மற்றும் சிறிது பொரித்த வெங்காயம் போடவும்.

*அதன்மேல் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1/2 கப் கொஞ்சம் குறைவாக நீர் ஊற்றவும்.

 *அதன்மேல் சாதம், நெய் மற்றும்  மீதமுள்ள புதினா கொத்தமல்லி,பொரித்த வெங்காயம்+கலரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

*ஆவி வெளியே போகாதவாறு சிறுதீயில் மூடி போட்டு 30 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

Related Videos