மீன் குழம்பு-3 | fish kuzhambu

தேவையான பொருட்கள்:

மீன் - 8 துண்டுகள்
புளி - 1எலுமிச்சை பழ அளவு
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
கத்திரிக்காய் - விருப்பதிற்கேற்ப
மாங்காய் - 4 துண்டுகள்
உப்பு + எண்ணெய் = தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

நசுக்கிக் கொள்ள:

சின்ன வெங்காயம் - 8
பூண்டு பல் - 5
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

தாளிக்க:

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

* மீனை சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.

* புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு, மிளகாய்தூள் மற்றும் அரைத்த தக்களி விழுது சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

*நசுக்க வேண்டிய பொருட்களை நசுக்கிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து,நசுக்கிய பொருள் மற்றும் கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.

*பின் வதங்கியதும் புளி கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* கொதித்ததும் மீன் மற்றும் மாங்காய் துண்டுகளை போட்டு நன்கு கொதித்த பின் மல்லித்தழை தூவி இறக்கவும்.


Related Videos