வரகரிசி மிளகு பொங்கல் | Wheat rava Ven pongal
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
நீர் - 3 1/2 கப்
உப்பு- தேவைக்கு
தாளிக்க:
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
மிளகு+சீரகம் - தலா 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வரகரிசி மற்றும் பாசிப்பருப்பு இவற்றை கழுவி 3 1/2 கப் நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3-4 விசில் வரை வேகவைக்கவும்.
*வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ள்வும்
*மிளகு மற்றும் சீரகத்தினை கரகரப்பாக பொடிக்கவும்.
*பின் நெய்யில் முந்திரி,பொடித்த மிளகு சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சேர்க்கவும்.