ரவா உப்புமா | Rava Upma

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
நீர் - 2 கப்
வெங்காயம் -1 சிறியது
பச்சை மிளகாய் -2
நெய் -1 டீஸ்பூன்
எண்ணெய் + உப்பு = தேவைக்கு

தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*ரவையை லேசாக வெறும் கடாயில் வறுத்தெடுக்கவும்.வெங்காய்த்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி 2 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதிக்கும் போது வருத்த ரவை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கெட்டிபடாமல் கிளறவும்.

*தண்ணீர் சுண்டிவரும் போது நெய் சேர்த்து இறக்கி மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து கிளறினால் ரவை வெந்து பொலபொலவெனவும் நெய் வாசனையுடனும் நன்றாக இருக்கும்.

*சட்னி/ சர்க்கரை உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Related Videos