வெஜ் ப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய கோஸ்+கேரட் - தலா 1/2 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 1
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
* கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காயவைத்து பூண்டுப்பல்+வெங்காயம்+பொடியாக நறுக்கிய வெங்காயத்தாலின் வெள்ளைப்பகுதி சேர்த்து வதக்கவும்.
*பின் பச்சை மிளகாய், கோஸ், கேரட், குடமிளகாய் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 - 6 நிமிடங்கள் வரை வதக்கவும்.
*சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கி சாதம், உப்பு சேர்த்து நன்கு கிளறி மிளகுத்தூள் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*நான் மூன்று கலர் காய் மட்டுமே சேர்த்து செய்துள்ளேன்.விரும்பினால் சோளம், பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்க்கலாம்.
*வெள்ளை மிளகுத்தூள் பதில் கருப்பு மிளகுத்தூள் மற்றும் பச்சை மிளகாய் பதில் சில்லி சாஸ் 1 டீஸ்பூன் சேர்க்கலாம் சாதத்தின் கலர் லேசாக மாறும்.
*காய்களை 5 நிமிடங்கள் வரை வதக்கினால் போதும்,முழுவதும் வேககூடாது.அதிக தீயில் வைத்து செய்யவும்.