வெந்தயக்கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
கோதுமைமாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 3/4 கப்
மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*பின் எண்ணெய் விட்டு மிருதுவாக மேலும் பிசைந்து 1/2 - 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*மாவை சிறு உருண்டைகளாக எடுத்து தேய்த்து இருபுறமும் எண்ணெய்/நெய் விட்டு சுட்டெடுக்கவும்.