கேழ்வரகு அடை
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை - 1/2 கப்
காய்ந்த மிளகாய் -1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை 2ஆக கிள்ளி போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் முருங்கை இலை சேர்த்து வதக்கி இறக்கவும்.
*மாவில் உப்பு மற்றும் வதக்கிய வெங்காய கலவை சேர்த்து நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
*சிறு உருண்டைகளாக எடுத்து மெலிதாக தட்டி தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.