இறால் தொக்கு | Prawn Thokku
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த இறால் - 500கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*வெங்காயம் மற்றும் தக்காளியை கட் செய்யவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் மிளகாய்த்தூள் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் உப்பு மற்றும் இறால் சேர்த்து மூடவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
*5 நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் நீர் இருக்கும்,அது சுண்டும் வரை சுருள சுருள கிளறி இறக்கவும்.
*ஈஸி இறால் தொக்கு ரெடி.