கொத்துக்கறி ஆம்லட் | Kothukari Omelette
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி -100 கிராம்
முட்டை- 2
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
சோம்புதூள் -3/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கொத்துக்கறியை கழுவி நீரை வடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் தூள் வகைகள், உப்பு மற்றும் சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும்.
*பின் கொத்துக்கறியை சேர்த்து வதக்கி சிறிது நீர் தெளித்து வேகவிடவும்.
*கறி வெந்து டிரையாக வரும் வரை வதக்கி ஆறவிடவும்.
*அதில் ஆறிய கறியை சேர்த்து கலக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி ஆம்லட்டுகளாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.