மட்டன் உருண்டைக் குழம்பு | Mutton Urundai Kuzhambu
தே.பொருட்கள்:
உருண்டைக்கு:
மட்டன் கீமா - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
முட்டை - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
உப்பு - தேவைக்கு
குழம்புக்கு:
அரிந்த வெங்காயம் - 1பெரியது
அரிந்த தக்காளி - 1 பெரியது
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
பொடியாக அரிந்த புதினா கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சைசாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
செய்முறை விளக்கம்:
*கீமாவை கழுவி தண்ணியை நன்கு வடித்துக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் போட்டு லேசாக வதக்கவும்.பின் கீமாவை போட்டு நன்கு நீர் வற்றும் வரை வதக்கி ஆறவிடவும்.
*அதனுடன் உப்பு, பொட்டுக்கடலை மாவு, சோம்புத்தூள் தக்காளி முட்டை சேர்த்து பிசைந்து உருண்டைகளாகி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, தூள் வகைகள் மற்றும் புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*பின் தேங்காய்ப்பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் பொரித்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.