ஈஸி மட்டன் வறுவல் | Easy Mutton Varuval
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
அரைத்த சின்ன வெங்காய விழுது - 2 டேபிள்ஸ்பூன்
அரைத்த பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
பொடியாக அரிந்த புதினா, கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
* குக்கரில் மட்டனுடன் சிறிதளவு புதினா கொத்தமல்லி மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்கள் மற்றும் 1 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெந்த கறி மற்றும் மீதமுள்ள புதினா கொத்தமல்லியை சேர்த்து நன்கு நீர் சுண்டும் வரை சுருள கிளறி இறக்கவும்.