ஸ்பானீஷ் ஆம்லெட் | Spanish Omelette
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
உருளைக்கிழங்கு - 1
கொத்தமல்லித்தழை -சிறிது
நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
நறிக்கிய வெங்காயத்தாள் - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1 சிறியது
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
நறுக்கிய வெங்காயம் - 1டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*முட்டையை உடைத்து நன்கு அடித்து அதில் மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
*உருளை மற்றும் கேரட் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், உருளை மற்றும் கேரட் லேசாக வதக்கவும்.இறக்கும் போது கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் மற்றும் குடமிளகாய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.
*ஆறியபின் அதனை முட்டை கலவையில் கொட்டி ஆம்லெட்டாக சுட்டெடுக்கவும்.
*காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்து குடுக்கலாம்.