முட்டை குழம்பு | Egg Kuzhambu
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
புளி - 1 எலுமிச்சையளவு
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
* புளியை 1கோப்பையளவு கரைத்து அதனுடன் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*வெங்காய்ம், பூண்டு மற்றும் தக்காளியை நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதித்ததும் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.
*ஒரு முட்டை ஊற்றி வெந்து மேலே வரும்போது இன்னொரு முட்டையை ஊற்றவும்.
*முட்டைகள் வெந்ததும் குழம்பை இறக்கவும்.