மார்கண்டம் சூப் | Markandam Soup
தேவையான பொருட்கள்:
மார்கண்டம் -1/4 கிலோ
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*குக்கரில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தூள்வகைகள் மற்றும் மார்கண்டம் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் 2 அல்லது 3 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*பின் சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்து சிறிது கொதித்ததும் இறக்கவும்.
*சூடாக பரிமாற நன்றாக இருக்கும்.