முட்டைத் தொக்கு | Egg Thokku
தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலாபொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் அரியவும்.
*முட்டையை 2 ஆக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது+தக்காளியைப் போட்டு நன்கு மசிய வதக்கவும்.
*வதங்கியதும் மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலா போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
*தண்ணீர் சுண்டி வரும் போது முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி இறக்கவும்.