ஆட்டுக்கால் குழம்பு | Aattukal kuzhampu

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த‌ ஆட்டுக்கால் ‍- 1 செட்
மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்த துவரம்பருப்பு  - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம்  -1
நறுக்கிய தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
தனியாதூள்- 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க:

கிராம்பு -3
பிரியாணி இலை- 2
பட்டை - சிறுதுண்டு
ஏலக்காய்  - 2

அரைக்க:

தேங்காய்த்துறுவல்  - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*ஆட்டுக்காலை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 - 5 விசில் வரை வேகவைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி மற்றும் தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் வேகவைத்த கால், நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்றாக கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் கொதிக்கவைத்து இறக்கவும்.

*சப்பாத்தி,பரோட்டா,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.


Related Videos