மசாலா பால்
தேவையான பொருட்கள்:
பால் - 3 கப்
பாதாம்பருப்பு - 10
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
சாரைப்பருப்பு + பிஸ்தாபருப்பு - அலங்கரிக்க
செய்முறை விளக்கம்:
*பாதாம்பருப்பை ஊறவைத்து தோல்நீக்கி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
*பாலில் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
*வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து கரைய விடவும்.
*வடிகட்டி பாலில் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
*பின் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும்.
*பரிமாறும் போது பிஸ்தாபருப்பு மற்றும் சாரைப்பருப்பு சேர்த்து பருகவும்.