முட்டை 65 | Egg 65
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 4
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
புட்கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை விளக்கம்:
*வேக வைத்த முட்டையை 2 கட் செய்து அதில் உப்பு, கலர், மிளகாய்த்தூள், தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
*முட்டையை உடைத்து நன்கு அடித்து வைக்கவும்.
*மசாலா தடவிய முட்டைகளை ஒவ்வொன்றாக அடித்த முட்டையில் தோய்து ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.