மட்டன் சுக்கா வறுவல் | Mutton Chukka Varuval
தேவையான பொருட்கள்:
மட்டன் - 3/4 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
சோம்பு - 1 1 /2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 4
மட்டனில் வேகவைக்க:
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
அரிந்த வெங்காயம்+தக்காளி - தலா 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*சுத்தம் செய்த மட்டனில் வேக வைக்க கொடுத்துள்ளவைகளை போட்டு சிறிது நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தூள்வகைகள் சேர்த்து வதக்கி வேகவைத்த மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
*கொஞ்சம் காரம் அதிகமா இருக்கும்.காரம் குறைவாக சாப்பிடுபவர்கள் அளவுகளை குறைத்து போடவும்.