சோள முட்டை ஆப்பம் | Jowar Egg Appam

தேவையான பொருட்கள்: 

சோளம் -1 கப்
வரகரிசி- 1 கப்
வேகவைத்த வரகு சாதம் -1/4 கப்
உப்பு -தேவைக்கு

ஆப்பமாவில் கலக்க:

கெட்டி தேங்காய்ப்பால் -1/4 கப்
சர்க்கரை- 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/4 டீஸ்பூன்

முட்டை ஆப்பத்திற்கு:

முட்டை- 2
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
சோம்புத்தூள்- 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*சோளம் மற்றும் வரகரிசி இரண்டையும் ஒன்றாக குறைந்தது 6 மணிநேரம் ஊறவைக்கவும்.சோளம் ஊற நேரமாகும்.

*ஊறியதும் உப்பு+வரகரிசி சாதத்துடன் மிக நைசாக அரைத்து புளிக்கவைக்கவும்.
*மாவு புளித்ததும் தேவையான ஆப்பமாவில் தேங்காய்ப்பால், பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் முட்டை, மஞ்சள்தூள், உப்பு மற்றும் சோம்புத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
*இதனுடன் தேங்காய்ப்பால் கலந்த ஆப்பமாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

*ஆப்பசட்டியில் ஒருகுழிக்கரண்டி மாவை ஊற்றி,ஆப்பசட்டியை லேசாக சுற்றவும்.பின் மூடி போட்டு வேகவைக்கவும்.

*வெந்ததும் அதன் மீது சர்க்கரை தூவி தேங்காய்பாலுடன் பரிமாறலாம்.

*அல்லது சர்க்கரை தூவாமல் இடியாப்ப குருமாவுடன் பரிமாறலாம்.

*இது முட்டை சேர்க்காமல் செய்த சாதா ஆப்பம்.

பின் குறிப்பு:

*தேங்காய்ப்பாலை ஒரேடியாக மாவில் ஊற்றிவிட்டால் அதை உடனே சுட்டிவிடவேண்டும்.

*இதே ஆப்பமாவில் சர்க்கரை(அ) வெல்லம் சேர்த்து ஒலையாப்பம் செய்யலாம்.

Related Videos