மட்டன் வெள்ளை குருமா | Mutton White Kurma
செய்முறை விளக்கம்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம் மற்றும் தக்காளியை அரியவும்.பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள், புதினா கொத்தமல்லி, மட்டன் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி உப்பு மற்றும் தேவையானளவு நீர் வைத்து 3 விசில் வரை வேக வைக்கவும்.
*வெந்ததும் தயிர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை அடங்கியதும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.