ஹரியாலி சிக்கன் கபாப் Hariyali Kabab
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன்-1/4 கிலோ
தயிர்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்
*சிக்கனை சுத்தம் செய்து நடுத்தர துண்டுகளாகி,நீரில்லாமல் வடிக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைக்கவும்.
*பாத்திரத்தில் சிக்கன், உப்பு, எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் அரைத்த மசாலா சேர்த்து கலந்து குறைந்தது 2 மணிநேரம் ப்ரிட்ஜில் ஊறவைக்கவும்.
*க்ரில் செய்வதற்கு முன் சிக்கனை ப்ரிட்ஜிலிருந்து 1/2 மணிநேரத்திற்கு முன்பாக எடுத்து வைக்கவும்.
*அவனை 210°C முற்சூடு செய்யவும்.
*மூங்கில் குச்சியினை 1 மணிநேரம் ஊறவைத்த பின் சிக்கனை மூங்கில் குச்சியில் சொருகி 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.