ஒலையாப்பம்(ஸ்வீட் இட்லி) | OlaiAppam Sweet Idli
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
சாதம் - 1/4 கப்
தேங்காய் உடைத்த நீர் - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 +1/4கப்
வெல்லம் - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*அரிசி வகைகள் மற்றும் ஜவ்வரிசி இவைகளை 2 மணிநேரம் ஊறவைத்து சாதம், தேங்காய் உடைத்த நீர் மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்கு மைய கெட்டியாக அரைக்கவும்.
*மாவை உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேஅர்ம் புளிக்கவிடவும்.
*மாவை உபயோகப்படுத்தும் நேரத்தில் பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வறுத்து வைக்கவும்.
*வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டி புளித்த மாவில் கலக்கவும்.ஏலக்காய்த்தூளை மாவில் கலக்கவும்.
*இட்லித்தட்டில் ஒரு கரண்டி மாவை ஊற்றி அதன்மேல் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தேங்காய்துறுவல் சேர்க்கவும்.இப்படியே அனைத்தையும் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.