இட்லி மஞ்சூரியன் | Idli Manchurian
தேவையான பொருட்கள்:
இட்லி - 5
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
செய்முறை விளக்கம்:
*இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.
*அதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்
*எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளை பொரித்தெடுக்கவும்.
*சுவையான் இட்லி மஞ்சூரியன் ரெடி.
பின் குறிப்பு:
*குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்பதால் விரும்பி சாப்பிடுவாங்க,மீந்து போன இட்லிகளை இதுபோல செய்து குடுக்கலாம்.