மிளகு சீரக இட்லி | Pepper Jeera Idli
தேவையான பொருட்கள்:
இட்லி - 5
வெங்காயம் - 1 சிறியது
பூண்டுப்பல் - 3
கெட்டியான புளிச்சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 3
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
செய்முறை விளக்கம்:
*இட்லியை நடுத்தரமாக கட் செய்யவும்,வெங்காயம் மற்றும் பூண்டு பொடியாக நறுக்கவும்.
*மிளகு சீரகத்தை அரைக்கவும்,எடுக்கும் போது உரித்த பூண்டை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் பூண்டு போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி புளிசாறு மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் இட்லிகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
புளிப்பு மற்றும் காரம் சேர்த்து சாப்பிட இந்த இட்லி சூப்பரா இருக்கும்.மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.15 நிமிடம் கழித்து சாப்பிட்டால் புளிசாறு நன்கு ஊறி சாப்பிட நன்றாகயிருக்கும்.