ஒட்ஸ் இட்லி & தோசை | Oats Idli & Dosa
தேவையான பொருட்கள்:
ஒட்ஸ் - 2 கப்
உளுந்து - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து ஐஸ்தண்ணீர் தெளித்து இட்லிக்கு அரைப்பதுப்போல் நைசாக அரைக்கவும்.
*உப்பு+ஒட்ஸை உளுந்தை வழித்தெடுக்கும்போது சேர்த்து அரைத்தெடுக்கவும்
*இந்த மாவை 8 மணிநேரம் புளிக்கவைத்து இட்லி,தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
பின் குறிப்பு:
*இந்த ஒட்ஸ் இட்லி&தோசையை சூடாக சாப்பிடனும் ஆறிய பிறகு சாப்பிட்டால் ரப்பர் மாதிரி இருக்கும்.இதற்க்கு காரசட்னி பெஸ்ட் காம்பினேஷன்.