காஞ்சிபுரம் இட்லி & தேங்காய் சட்னி | kanchipuram idli & & coconut chutney

காஞ்சிபுரம் இட்லி

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2 கப்

புழுங்கலரிசி - 1 1/2 கப்

உளுந்து - 1 கப்

உப்பு - தேவைக்கு

சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

கரகரப்பாக பொடித்த மிளகு சீரகம் - தலா 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்

முந்திரி – விரும்பினால்

 செய்முறை விளக்கம்:

*இட்லி செய்ய கொடுத்துள்ள பொருட்களை உப்பு+சுக்குப்பொடி தவிர அரிசி+உளுந்து தனித்தனியாக ஊறவைத்து அரைத்து உப்பு+சுக்குப்பொடி சேர்த்து புளிக்கவைக்கவும்.

*மாவு புளித்ததும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு தாளித்து சேர்க்கவும்.நல்லெண்ணெயும் ஊற்றி மாவை நன்கு கலக்கவும்

*இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்

பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

புளி - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - 1

பூண்டுப்பல் - 1

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை,பெருங்காயம் - சிறிது

செய்முறை விளக்கம்:

*அனைத்தையும் ஒன்றாக அரைத்து தாளித்து சேர்க்கவும்.

Related Videos