பாசிபருப்பு தோசை & கார சட்னி | Moong dal Dosa & Kara Chutney

பாசிபருப்பு தோசை தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

பாசிபருப்பு - 1 கப்

வெந்தயம் -1/4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து  2 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*மாவை 6 மணிநேரம் புளிக்க வைத்து தோசைகளாக சுட்டெடுக்கவும்.

கார சட்னி

இந்த சட்னிக்கு வரமிளகாய்த்தூளுக்கு பதில காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்து சேர்க்கவேண்டும்.நன்றி பிரேமா!!

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3

பொடியாக நறுக்கிய தக்காளி - 5

காய்ந்த மிளகாய் -10 --12

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

 *காய்ந்த மிளகாயை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நைசாக அரைக்கவும்

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்  போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

*வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்

*நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய் விழுது மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்

*பச்சை வாசனை அடங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்

பின் குறிப்பு:

*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப சேர்க்கவும்.

*பாசிபருப்பு தோசைக்கு காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்

Related Videos