வெண்பொங்கல்&பாம்பே(கடலைமாவு)சாம்பார் | Venpongal &Bombay(Besan)Sambhar
பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 3/4 கப்
பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி -1டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பருப்பு, அரிசி, உப்பு, பால்மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவைக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
கடலைமாவு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி -தலா 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
புளிபேஸ்ட் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*கடலைமாவை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறவைத்து மஞ்சள்தூள் மற்றும் 1 1/2 கப் நீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் புளியை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கரைத்துவைத்த கடலைமாவை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி 5-6 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
*சிறிதளவு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*இந்த சாம்பார் சப்பாத்தி,பூரிக்கும் நன்றாகயிருக்கும்.