நெய் பிஸ்கட்
தேவையான பொருட்கள்:
மைதாமாவு - 1 கப்
நெய் - 1/2 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
செய்முறை விளக்கம்:
*அவனை 180°C 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.
*பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்
*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து ,மாவை சிறு உருண்டையாக எடுத்து லேசாக அழுத்தி இடைவெளிவிட்டு வைக்கவும்
*அவனின் வெப்பநிலையை குறைத்து 120°C ல் 10 -15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
பின் குறிப்பு:
* பிஸ்கட் அவனில் இருந்து எடுக்கும் போது வேகாதமாதிரி இருக்கும்.ஆறியதும் சரியாக இருக்கும்.
*அதிகநேரம் வேகவைத்தால் பிஸ்கட் நிறம் மாறிவிடும்.
*இந்த அளவில் 10 பிஸ்ட்கள் வரும்...மாவு பிசையும்போதே நானும்,என் பொண்ணும் கொஞ்சம் சாப்பிட்டாச்சு,கடைசியில் 8 பிஸ்கட்கள் தான் வந்தது.
*அலுமினியம் பாயிலுக்கு பதில் நான் பயன்படுத்தியிருப்பது மீள்சுழற்சி துணி,அவனில் வைத்து பேக்கிங் செய்வதற்கென்றே கடையில் கிடைக்கிறது.இந்த துணியை ஒரு முறை பயன்படுத்திய பின் நீரில் அலசி காயவைத்தாலே போதும்