பனீர் டிக்கா
தேவையான பொருட்கள்:
பனீர் - 250 கிராம்
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மூங்கில் குச்சிகள் - 6
செய்முறை விளக்கம்:
* பனீரை சதுர துண்டங்களாக வெட்டி மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் புதினா கொத்தமல்லி விழுது அனைத்தையும் கலந்து 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*மூங்கில் குச்சிகளை நீரில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*வெங்காயத்தை ஒவ்வொறு இதழாக பிரித்து பெரிய துண்டுகளாக வெட்டவும்.குடமிளகாயையும் பெரியதுண்டுகளாக வெட்டவும்.
*மூங்கில் குச்சியில் வெங்காயம், குடமிளகாய் மற்றும் பனீர் என மாற்றி மாற்றி சொருகவும்.
*270°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்