பன்
தேவையான பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 3 கப்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 1/4 கப்
பால் - 1/4 கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
வெள்ளை எள் - மேலே தூவ
செய்முறை விளக்கம்:
*வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
*ஒரு பவுலில் வெதுவெதுப்பான பால், வெண்ணெய்(பாலின் சூட்டிலேயே உருகிவிடும்), உப்பு மற்றும் ஈஸ்ட் தண்ணீர் அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்
*மாவை கொஞ்சகொஞ்சமாக கலக்கவும்.தற்று தளர்த்தியான பதத்தில் இருக்கவேண்டும்
*ஈரமானதுணியால் மூடி வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.
*பொங்கியிருக்கும் மாவை மீண்டும் நன்கு பிசைந்து 1/2 மணிநேரம் வெப்பமான இடத்தில் வைக்கவும்
*பின் அவன் டிரேயில் வெண்ணெய் தடவி இடைவெளி விட்டு மாவை விருப்பமான வடிவில் உருட்டி ஈரத்துணியால மூடி 3/4 மணிநேரம் வைக்கவும்.
*பின் முட்டையில் சிறிது தண்ணீர் கலந்து உப்பியிருக்கும் பன்களின் மீது தடவி எள்ளை தூவி விடவும்
*190°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்