முட்டையில்லா பைனாப்பிள் + கினோவா(Quinoa) ப்ரெட்
தேவையான பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
ப்ரவுன் சுகர் - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
கினோவா - 1/2 கப்
ஒட்ஸ் - மேலே தூவ
வெஜிடபிள் எண்ணெய் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
(அ)
பைனாப்பிள் ஜூஸ் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
* ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீர்விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு,கினோவாவை வேகவைத்து எடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு 1 சிட்டிகை, பேக்கிங் பவுடர் மற்றும் வேகவைத்த கினோவா கலந்து வைக்கவும்.
*இன்னொரு பவுலில் எண்ணெய் + சுகர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ்(அ)ஜூஸ் சேர்த்து கலக்கவும்.
*சிறிது சிறிதாக மைதா கலவையை நன்கு கலக்கவும்.பின் பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து கலக்கி கேக் பாத்திரத்தில் பட்டர் தடவி ஊற்றவும்.அதன் மேல் ஒட்ஸைனை தூவி விடவும்.
*180 C° அவனை முற்சூடு செய்து 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*பைனாப்பிள் வாசனையோடு ப்ரெட் சூப்பராகயிருக்கும்