பாகற்காய் ஜூஸ்
பாகற்காயில் விட்டமின் பி1,பி2,பி3 மற்றும் விட்டமின் சி,மாக்னீசம்,போலிக் ஆசிட்,இரும்புசத்து என நிறைய விட்டமின்கள் இருக்கு..இது மிகவும் குறைந்த கலோரி மற்றும் அதிகளவு நார்சத்து கொண்ட காய்.
இது ப்ரோக்கலியை விட இருமடங்கு பீடா கரோட்டின் கொண்டது. ஸ்பீனாச்சைவிட இருமடங்கு கால்சியம் சத்துக் கொண்டது.வாழைப்பழத்தை விட இருமடங்கு பொட்டசியம் நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் -1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+மிளகுத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாகற்காயை விதை நீக்கி அரிந்து 3/4 நீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
*அதனுடன் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து கலக்கி மிளகுத்தூள் மேலூ தூவி பருகவும்.
பின் குறிப்பு:
*பாகற்காயின் கசப்பிற்கேற்ப எலுமிச்சை சாறை சேர்த்து குடித்தால் கசப்பு தெரியாது.