நன்னாரி சர்பத்
கோடை காலத்தில் அதிகம் பயன்படுத்தும் மூலிகை நன்னாரி.இது சிறு கசப்பும்,இனிப்பும் கொண்டது.
வெயில் காலங்களில் உடல் குளிர்ச்சி அடைய நன்னாரி வேரி நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்தி கயவைத்து மண்பானையில் போட்டு சுத்தமான நீரை வைத்து அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவதுதான் நன்னாரி சர்பத்...
பரிமாறும் அளவு - 2 நபர்
தயாரிக்கும் நேரம் - 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
நன்னாரி சிரப் - 5 டேபிள்ஸ்பூன்
நீர் - 2 1/2 கப்
ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1/2
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் நன்னாரி சிரப், நீர், சப்ஜா விதை மற்றும் ஐஸ் கட்டிகள் கலந்து பரிமாறவும்.