குடமிளகாய்த் தொக்கு | Capsicum Thokku

தேவையான பொருட்கள்: 

பச்சை கலர் குடமிளகாய் - 1 பெரியது

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்

கெட்டி புளிசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை விளக்கம்:

*குடமிளகாயை விதைகளை நீக்கி நறுக்கவும்.

*அதை லேசாக எண்ணெய் விட்டு வதக்கி,ஆறியதும் மிக்ஸியில் நீர்விடாமல் அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து மிளகாய்த்தூளை போடவும்.

*உடனே அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.

*நீர் சுண்டியதும் உப்பு மற்றும் புளிசாரு சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கி இறக்கவும்.

பின் குறிப்பு:

*ரசம்,சாம்பார்,தயிர் சாதத்துக்கு மிகநன்றாக இருக்கும்.விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

Related Videos